Sunday, August 17, 2008

என் இனிய வேப்பமரம்..வானி பேருந்து நிலையத்தில் நான் இறங்கும் போது மணி விடியல் காலை 4.45. ஒரு பெரிய கருப்பு போர்வையை போன்று இருள் எங்கும் படர்ந்து இருந்தது. சில்லென்ற காற்று காதுக்குள் ஒரு ஊசியைபோல் இறங்கியது. மெல்ல வீட்டை நோக்கி நடக்க துவங்கினேன். வழியில் ஒரே ஒரு டீ கடை மட்டும் திறந்து இருந்தது. பனியில் நடந்து செல்லும் போது, யாரோ என் தலையில் ஒரு ஐஸ் கட்டியை வைத்து அழுத்துவது போன்ற ஒரு உணர்வு.

சாலையின் இரு பக்கங்களிலும் நியான் விளக்குகள், வெளிச்சத்தோடு சேர்ந்து வெப்பத்தையும் உமிழ்ந்துகொண்டு இருந்தன. இரவுப்பூச்சிகளின் வினோத சத்தம் அங்கு நிலவிய கடும் நிசப்தத்தை கலைத்துக்கொண்டு இருந்தது. இதோ என் வீடு வந்து விட்டது....

ன்று வரலக்ஷ்மி பூஜை என்பதால் வீட்டில் ஸ்பெஷல் ஆக வாசல் தெளித்து சற்றே பெரிய்ய கோலம் போட்டு இருந்தார்கள். வாசலில் ஒரு சாணி பிள்ளையார் வைக்கப்பட்டு அதன் மேல் ஒரு சிறு அருகம் புல்லை குத்தி வெய்த்து இருந்தனர். என்னை வரவேற்பதற்கு பிள்ளையார் வாசலில் காத்து இருக்கிறாரே என்று எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

ரு ரெண்டு மணி நேரமாவது குட்டி தூக்கம் போடலாம் என்று படுத்தால், மின்விசிறி காற்றில் தூக்கமே வரவில்லை. சரியென்று வீட்டின் கொல்லைபுறம் சென்று, வேப்பமரத்தின் அடியில் கட்டிலை விரித்து படுத்தேன். வேப்பமரம் அருகில் இருந்த அந்த சிறிய பிருந்தாவனத்தில் ஒரே ஒரு அகல் விளக்கு மட்டும் எரிந்து கொண்டு இருந்தது. அகல் விளக்கின் நெருப்பு அதை அணைக்க வரும் காற்றிடம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தது.

பாட்டி கொண்டு வந்து கொடுத்த பில்டர் காபியை உறிஞ்சியபடி கேட்டேன்:

"பாட்டி இந்த வேப்பமரத்துக்கு எவ்ளோவ் வயசு ஆறது?"

"ல்லா கேட்டே போ. உனக்கு என்ன வயசு ஆறதோ அதே வயசு தான் இந்த வேப்பமரத்துக்கும் ஆறது....."
"நீ சின்ன குழந்தையாய் இருக்கறப்போ...................."

தன் பிறகு பாட்டி சொன்ன எந்த வார்த்தைகளும் என் காதில் விழவே இல்லை. கட்டிலில் படுத்துக்கொண்டு அந்த வேப்பமரத்தையே பார்த்துக்கொண்டு இருந்தேன். இப்போது நன்றாக விடிந்து விட்டிருந்தது...

ப்படியானால் இந்த வேப்பமரமும் என்னை போலவே எங்கள் வீட்டில் வளர்ந்து வந்துள்ளது. எப்போது வளர்ந்தது என்றே தெரிய வில்லை - இன்று இவ்வளவு பெரிய்ய விருட்ஷம் ஆக வளர்ந்து நிற்கிறது. பச்சை பசேல் என்ற அதல் இலைகளும் நன்கு பரந்து விரிந்த கிளைகளும் பக்கத்து வீட்டின் உள்ளே வரை நீண்டு இருந்தன.

வேப்பமரத்திற்கு மஞ்சள், குங்குமம், பூ எல்லாம் வைக்கப்பட்டு இருந்தது. வேப்பமரம் மாரியம்மனின் வடிவம் என்பது எங்கள் வீட்டில் எல்லோருடைய்ய நம்பிக்கை.

வ்வளவு நாள் நான் ஏன் இந்த வேப்பமரத்தை இப்படி ரசிக்க வில்லை என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். என்னுடன் என் கூடவே 26 ஆண்டு காலம் வரை வளர்ந்துள்ளது. அப்படியானால் என்னுடைய சுகம், துக்கம், கோபம், பசி, குழப்பம், அழுகை, சிரிப்பு என்று எல்லாவற்றையும் இந்த வேப்பமரம் பார்த்து இருக்கும் தானே?

ரு பெரிய பச்சை குடையின் கீழ் நான் படுத்து இருப்பதை போன்று தோன்றியது. இலைகளின் இடுக்குகளின் வழியே வானத்தை பார்த்த போது, வானம் பல்லாயிரக்கணக்கான சிறு சிறு துண்டுகளாக சிதறியிருப்பதாக தோன்றியது.

ந்த மரங்கள் தான் எவ்வளவு விஷயங்களை நமக்கு சொல்லி தருகின்றன? பாவம், நாம் தான் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. மரங்களின் பொறுமையும், அமைதியும், சகிப்புத்தன்மையும், உதவும் மனப்பான்மையும், வலிமையும், தியானமும் மனிதரில் எத்தனை பேருக்கு வரும்? தன்னை வெட்ட வருபவனுக்கு கூட, தான் தரையில் சாயும் கடைசி நிமிடம் வரை நிழலை அல்லவா கொடுக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்...

தோ நான் படுத்திருக்கும் கட்டில், மேசை, நாற்காலி , ஜன்னல், கதவு என எல்லாமே மரங்களின் பாகங்களாக வியாபித்து இருந்தன.

சாலையில் சென்று கொண்டு இருக்கும் போதோ, பேருந்தில் செல்லும் போதோ, கம்பீரமாக வளர்ந்து நிற்கும் மரங்களை எவ்வளவு நாட்கள் நான் கவனித்து இருப்பேன்? பல சமயங்களில் அதை ஒரு ஜடப்பொருளாக நினைத்து கண்டும் காணமலும் சென்று இருக்கிறேன். இன்னும் பல சமயங்களில், என் கண் முன்னே விரிந்து நிற்கும் பெரிய மரங்களை கூட நான் கண்டுகொண்டதே இல்லை. மரம் என்று அப்படி ஒன்றுமே அங்கு இல்லை என்பது போல சென்று இருக்கிறேன். சுட்டெரிக்கும் வெய்யிலில் எனக்கு நிழல் தேவைப்படும் போது மட்டும் மரம் என் கண்களுக்கு தெரியும்.... அப்போது தான் மரங்களை நான் சாலை முழுவதும் தேடுவேன்.... என் மீதே எனக்கு கோபமாக வருகிறது...

னால் எது எப்படி ஆயினும், மரங்கள் மட்டும் எப்போதும் சிரித்துக்கொண்டு தான் இருக்கின்றன.... அதற்கு தெரியும் போலும்...என்றாவது ஒரு நாள் நான் கண்டிப்பாக அதை தேடி செல்வேன் என்று?

வ்வளவு காலம் இந்த வேப்பமரத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு அதனிடம் ஒரு பெரிய "சாரி" கேக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்... அதுமட்டும் இல்லாமல் இனிமேல் எப்போதெல்லாம் சாலையின் ஓரங்களில் மரத்தை காண்கின்றேனோ அப்போதெல்லாம் ஒரு சின்ன சிரிப்பையாவது சிரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்....(என்ன பார்பவர்கள் இவன் ஒரு பைத்தியம் என்று நினைக்க கூடும்... அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டால் முடியுமா?)

திடீர் என்று இந்த மரங்களின் மீது எனக்கு ஒரு புதிய காதல் பிறந்ததைப்போன்று உணர்ந்தேன்....

ன்னையும் அறியாமல் அந்த வேப்பமரத்தின் அருகில் சென்று, அதை மிக வாஞ்சனையோடு வருடிக்கொடுத்தேன்..... ஒரு ஆணின் முதல் ஸ்பரிசத்தில் சிலிர்க்கும் ஒரு பருவப்பெண்ணை போல, அதுவும் தனக்குள் சிலிர்த்துக்கொண்டது.

ந்த சிலிரிப்பினால், காற்றில் வேகமாக அசைந்து, அதன் காய்ந்த சருகுகளை என் மீது தூவியது....

மிகுந்த பாசத்துடன்....!

அப்ரைசல்

எப்ப பார்த்தாலும் ரொம்ப சீரியஸ் ஆக, பீலிங்க்ஸ் உடனேயே எழுதுகிறோமே....ஜாலி யாக எதாவது ட்ரை பண்ணலாம் என்று நினைத்ததில் இதோ..

ஒரு சின்ன கற்பனை:

இது அப்ரைசல் டைம். நம்ம எல்லோரும் எப்படா அப்ரைசல் முடியும் எப்ப நமக்கு ஹைக்கு (hike) குடுப்பாங்கன்னு காத்துட்டு இருக்கோம். எங்க மேனேஜர் இப்போதான் என்னை அப்ரைசல் மீட்டிங் க்கு வரும் படி சொல்லிட்டு போனார்.

"வெல்கம் மிஸ்டர் ஸ்ரீனிவாஸ் ...ஐ ஆம் வெரி ஹாப்பி டு ஹாவ் திஸ் அப்ரைசல் மீட்டிங் வித் யு"

" தேங்க் யு"

"சோ....உங்க அப்ரைசல் ரேடிங் எல்லாம் பார்த்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதுல உங்களக்கு ஏதாவது மாற்று கருத்து இருக்கிறதா?"

"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை." (அப்படி எதாவது இருந்தால் மட்டும் என்ன மாற்றி விடவா போகிறீர்கள்).

"வெரி குட். இப்போ பார்தீங்கன்னா லாஸ்ட் இயர் விட இந்த இயர் நம்ம லாபம் ரொம்ப கம்மி. நாம நினைச்ச டார்கெட்ட நம்மால் அடைய முடியல. நாம இன்னும் நல்லா வேலை பண்ணனும்"

"ஹோ ... ஐ சீ".

"அதனால....இந்த இயர் உங்களுக்கு, உங்களோட ஹார்ட் வொர்க்க பாராட்டி 5% ஹைக்கு குடுத்து இருக்கு நம்ம கம்பெனி".

(இதை கேட்ட வுடன் எனக்கு கொஞ்சம் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை. விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விடுகிறேன். என் மேனேஜர் ஒன்றும் புரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்.)

"என் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க"?

"அது ஒன்னும் இல்ல....இவ்ளோவ் கஷ்டப்பட்டு வேலை செஞ்ச எனக்கே வெறும் 5% தான் ஹைக்கு கொடுத்து இருக்காங்க. அப்டீன்னா உங்களுக்கு எவ்ளோவ் கொடுத்து இருப்பாங்கன்னு ஒரு நிமிஷம் யோசிச்சு பார்த்தேன்.....அதான் என்னால சிரிப்ப அடக்க முடியல..."

"கெட் அவுட் ....." என்று மேனேஜர் கத்துகிறார்....

(உண்மையிலேயே என் மேனேஜர் ரொம்ப நல்லவர், கண்ணியமானவர் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் :-) )

மௌனம் என்ற வார்த்தை...


ரேயொரு ஓரப் பார்வையில் நீ
வினவிச் சென்ற ஓராயிரம்
வினாக்களில் ஒன்றுக்கு கூட
விடை கண்டறிய முடியவில்லை இன்னும் என்னால்...

ன்றும் பேசாமல் விலகிச்
செல்லும்போது - நீ எடுத்து
வைக்கும் ஒவ்வொரு அடியின்
தூரத்திலும் இரண்டின் மடங்காய்
பெருகும் மௌனத்தின் தாக்கத்தில்
பேரலையில் சிக்கிக் கொண்ட ஒரு
துரும்பை போல, தூக்கி எறியப்படுகிறேன்
ஒவ்வொரு முறையும் நான்

ன்றோ நீ விட்டு சென்ற
சில நினைவுகள் என் இதயத்தில்
நடுக்கடலில் போடப்பட்ட ஒரு
இரும்புக் குண்டின் ஆழத்தில்
படிந்து கிடக்கின்றன...

ப்படி தெரிந்து விடப்போகிறது உனக்கு ?

நாணம் என்ற ஒன்றுதான்
உன்னால் பேச முடிகிற
காதலின் மொழி என்றால் அதில்
மௌனம் ஒன்று தான் இப்போதைக்கு
எனக்கு தெரிந்த ஒரே ஒரு
வார்த்தை என்று...!

Sunday, August 10, 2008

உயிர் பேட்டரி..


ன்று அலுவலகத்திற்கு சீக்கிரம் புறப்பட்டு விட்டேன் . எப்பொழுதும் பேருந்தில் போகும் பொழுது எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல்களை கேட்டுக்கொண்டு வருவது வழக்கம் . இன்று ஏனோ பாட்டு கேட்க தோன்ற வில்லை. சற்றே மெல்ல கண்களை மூடி சிந்தனையில் ஆழ்ந்தேன்...சட்டென்று எனக்கு அபியின் நினைவு வந்தது.... ஹோ ....நான் அபி பத்தி உங்களிடம் சொல்லவே இல்லையே.

பி எங்கள் எதிர்த்த வீட்டு சுட்டி பெண். இப்போது 7 வது வகுப்பு படித்து கொண்டு இருக்கிறாள். இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உரையாடல் :

ன்று நான் வழக்கம் போல அபியோடு பேசிக்கொண்டு இருந்தேன். அன்று அவளின் பள்ளியில் நடந்ததை எல்லாம் என்னிடம் சொல்லி கொண்டு இருந்தாள். அபியின் அம்மா எனக்கு ஓர் வேலை கொடுத்து இருந்தார். அபி ஒழுங்காக வீட்டு படத்தை செய்கிறாளா என்று பார்த்துக்கொள்வது தான் அது.

ட்டென்று அபி என்னிடம் அந்த கேள்வியை கேட்டாள்:

"ண்ணா , உயிர்ன்னா என்ன? அது எப்படி இருக்கும்"?

"ன் அபி திடீர்ன்னு இந்த கேள்வி கேக்கற"?

"ன்னிக்கு எங்க கிளாஸ்ல மிஸ் பாடம் நடத்தும் பொது சொன்னாங்க உயிர் ன்னு ஒன்னு இருக்கறதால தான் நாம எல்லோரும் இப்போ பேசிட்டு, நடந்துண்டு இருக்கோம்ன்னு. உயிர்ன்னு ஒன்று இல்லேன்னா நாம எல்லோரும் செத்து போயிடுவோம்ன்னு. எனக்கு நம்மளோட உயிர் எப்படி இருக்கும்னு பார்க்கணும்......சொல்லுங்க".

னக்கு என்ன சொல்லி அவளுக்கு புரிய வைப்பது என்று தெரியவில்லை....அவள் அருகில் ஒரு டார்ச் லைட் இருந்தது. நான் சட்டென்று:

"பி...நம்மளோட உயிர் கூட இந்த டார்ச் லைட்ல இருக்கற பேட்டரி மாதிரி தான். பேட்டரி இருந்தால் தானே டார்ச் எரியும்?...அது மாதிரி உயிர் இருந்தால் தன் நம்மளால இயங்க முடியும்".

"சேரி...அப்போ இந்த டார்ச் பேட்டரி இன்னும் 2 இல்லேன்னா 3 மாசத்துல தீர்ந்து போய்டும் ....அப்படீன்னா நம்மளோட உயிர் பேட்டரி"?

"யிரும் அதே மாதிரிதான் அபி .....ஆனா அது அவ்ளோவ் சீக்கிரம் தீராது.. ஒரு உதாரணதுக்கு 80 - 85 வருடம் வரை வரும்"

"டேயப்பா...அப்போ நம்ம உயிர் பேட்டரி ரொம்ப பெரிசா"?

"ல்ல அபி ....உண்மையா சொல்லப்போனா நம்மளோட உயிர் பேட்டரி நம்ம கைக்கு உள்ளேயே அடங்கிடும்.....ஆனா ரொம்ப சின்னதா இருந்தாலும் ரொம்ப வருஷம் வரைக்கும் வரும்".

"ங்க அப்பா தான் இந்த டார்ச் குள்ள இந்த பேட்டரிய போட்டார்"....அப்போ நமக்குள்ள இந்த பேட்டரிய வெச்சது யாரு"?

"ம்ம்.....கடவுள் தான் அபி .....நாம கும்பிடற கடவுள் தான் நமக்குள்ள இந்த பேட்டரிய வெச்சார்நாம பொறக்கும் போதே இந்த பேட்டரிய நமக்குள்ள போருத்திடுவார்.

"டேயப்பா....அப்படீன்னா அவர் கிட்ட எவ்ளோவ் பேட்டரி இருக்கும். இந்த டார்சோட பேட்டரி கெமிக்கல்ஸ் யூஸ் பண்ணி பண்ணியிருப்பங்கன்னு எங்க டெக்ஸ்ட் புக்ல படிச்சேன் ....அப்போ நம்ம உயிர் பேட்டரிய கடவுள் எப்படி செஞ்சு இருப்பார் ?"

"ம்ம உயிர் பேட்டரி ரொம்ப காம்ப்ளெக்ஸ் ஆனது அபி ....உனக்கு புரியும் படி சொல்லனும்னா நம்ம உயிர் பேட்டரி உள்ள 4 ரூம்ஸ் இருக்கும் ...அதுக்கு உள்ள இருக்கற வோல்வுகள் தான் நம்ம உயிர் பேட்டரிய துடிக்க வைச்சுண்டே இருக்கும். எப்போ இந்த துடிப்பு நிக்குதோ அப்போ நம்ம உயிர் பேட்டரில சார்ஜ் தீர்ந்து போச்சுன்னு அர்த்தம்"...

ன் நல்ல நேரம் உயிர் பேட்டரிக்கு எது பாசிடிவ் சார்ஜ் எது நெகடிவ் சார்ஜ் ன்னு இவள் கேட்கவில்லையே என்று சிறிது நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், தனது அடுத்த கேள்வியை கேட்டே விட்டாள்:

"ந்த டார்சோட பேட்டரி தீர்ந்து போச்சுன்னா நாம வேற புதுசா வாங்கிக்கலாம் ..இல்லேன்னா இத ரீசார்ஜ் பண்ணிக்கலாம் இல்லையா ......அப்போ ஏன் இந்த கடவுள் மட்டும் வேற எங்கேயும் வாங்க முடியாம , ரீ சார்ஜ் உம் பண்ண முடியாம இந்த உயிர் பேட்டரிய செஞ்சு இருக்கார்?"

ரு நிமிடம் மௌனம். பின் சொன்னேன்:

"நீ சொன்னது ரொம்ப சரி அபி ....இந்த கடவுள் ரொம்ப மோசம் ... ரீ சார்ஜ் பண்ண முடியாத ஒரு பேட்டரிய தயாரிச்சு வைச்சு இருக்கார்"....

Monday, August 4, 2008

ஏன் இந்த வலை பூ?

தாவது எழுத வேண்டும் என்று அவ்வவ்போது நினைப்பதுண்டு. தனிமையில் இருக்கும் போதோ அல்லது அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போதோ, இந்த எண்ணம் அதிகமாக தோன்றும்! சிந்தனைகள் அதிகமாக தூண்டப்படுவது தனிமையில் இருக்கும் போது தானே!

நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகிலிருந்து தமிழில் எழுதுவது மிகவும் குறைந்து விட்டது. எப்போதாவது உறவினர்களுக்கு கடிதம் எழுவதுண்டு. அதுவும் இப்போது அறவே நின்று விட்டது. மின்னஞ்சல்களும், குறுந்தகவல்களும் நீக்கமற நிறைந்து விட்ட இன்றைய கால கட்டத்தில் நான் மட்டும் விதி விலக்கா என்ன?

தமிழில் எழுதுவதென்றால் எனக்கு கொள்ளை ஆசை! மூன்றாம் வகுப்பு படிக்கும் பொது தகர சிலேட்டில் கரி பூசி அப்பி, கலர் பென்சிலால் அன்றைய வீட்டு பாடத்தை சக நண்பர்களுடன் (தப்புத்தப்பாக) எழுதிய நாட்களிலிருந்தே நான் தமிழை நேசிக்க ஆரம்பித்திருந்தேன்! முதன் முதலில் நான் தமிழில் எழுத கற்றுக்கொண்ட வார்த்தை "அம்மா" என்பதுதான்!

அந்த சிறுவயதில் எனக்கு மிகப்பெரிய்ய ஏக்கம் ஒன்று இருந்ததுண்டு. ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களை பார்த்து வந்த ஏக்கம் அது. அந்த ஏக்கம் மெல்ல மெல்ல நான் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பயமாக மாறியது! என்னால் கூட அவர்களைப்போல் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியுமா என்பதுதான் அது.

நான் அவ்வவ்போது எனக்குள் கேட்டுக்கொள்வது இதுதான்: "தாய் மொழியில் கல்வி என்பது எது வரை சாத்தியம்?"

"மொழி என்பது கருத்துபரிமாற்றத்துக்கான ஒரு கருவியாக மட்டும் இல்லாமல், நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும்" என்று நான் எங்கோ எதிலோ படித்தது நினைவிற்கு வருகிறது.

இன்று கூட எனக்கு ஒரு கற்பனை உண்டு. நான் அலுவலகத்தில் பயன்படுத்தும் கம்பைலர்களும் (Compilers), லிங்கர்களும் (Linkers) தமிழ் மொழியில் வேலை செய்ய தொடங்கினால் எப்படி இருக்கும் என்று..!

(இன்னும் பகிர்வோம்)